Sports

IPL 2019:பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா!

ஐபிஎல் தொடரில் மொகாலியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, கிறிஸ் கெய்ல் 14 ரன்களுக்கு அவுட்டானார்.இதனால் பஞ்சாப் அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு மயாங்க் அகர்வால் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.நிக்கோலஸ் பூரன் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் மயாங்க் அகர்வால் ரன்-அவுட் ஆனார்.அடுத்து வந்த சாம் கரன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்துள்ளது.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லின், கில் இறங்கினர். இந்த ஜோடி பவர்பிளேயில் 62 ரன்கள் எடுத்தனர். கிரிஸ் லின் 22 பந்துகளில் 46 எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த உத்தப்பா 22 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் கில் உடன் ரஸல் ஜோடி சேர்ந்து அணியின் ரன் வேகத்தை கனிசமாக உயர்த்தினர். கில் 37 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். ரஸல் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து போது வெளியேறினார். 15 ஓவர்களில் கொல்கத்தா அணி 151 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. கில் 49 பந்துகளில் 65 ரன்களிலும் தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்வின், டை, முகமது சமி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.