Sports

IPL 2019 : தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்;ராஜஸ்தான் அணி வெற்றி 

ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டிவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக லின், கில் களமிறங்கினார்கள். லின் டக் அவுட்டாகி வெளியேற அவரை தொடர்ந்து கில் 14 ரன்களிலும், ரானா 21 ரன்களிலும் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் தினேஷ் கார்த்தி அரைசதம் அடித்தார்.

தினேஷ் கார்த்தி அரைசதம் அடித்தார்.

கொல்கத்தா அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் 14 ரன்களுக்கு நடையை கட்டினார். மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் பொறுப்புடன் விளையாடி 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். ரஹானே 34 ரன்களும், சஞ்சு சாம்சன் 22 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ரியன் பராக் 47 ரன்கள் குவித்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ரியன் பராக் நிதானமாக ஆடி 47 ரன்கள் குவித்தார். இறுதியில் ஜோஃப்ரா ஆர்கெர் அதிரடியாக 27 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதனையடுத்து, ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இது கொல்கத்தா அணி சந்தித்த 7வது தோல்வியாகும்.