Sports

IPL 2019 : சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா ? கொல்கத்தாவுடன் மோதுகிறது ! 

ஐ.பி.எல் தொடரின் இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.இந்த வருட ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஏப்ரல் 9 அன்று மோதின. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி அட்டவனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த வருட சீசனில் விளையாடிய 7 லீக் போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது சென்னை.கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒருமுறை வென்று புள்ளி அட்டவனையில் முதலிடத்தை சென்னை அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MS Dhoni

எம்.எஸ்.தோனி இந்த வருட ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் பங்கேற்று 214 ரன்களை எடுத்து 3 முறை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.ஃபாப் டூபிளெஸ்ஸிஸ் மற்றும் அம்பாத்தி ராயுடு சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தி வருகின்றனர்.

தீபக் சகார் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இந்த சீசனில் இவர்கள் எடுத்த விக்கெட்டுகள் முறையே 10, 9 ஆகும். கொல்கத்தா அணிக்கு எதிராகவும் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணி சென்னை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு பதிலடி தரும் விதமாக இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி களமிறங்கும் என தெரிகிறது.

Andre Rusell

ஆண்ட்ரே ரஸல் கொல்கத்தா அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். இந்த சீசனில் 303 ரன்களை குவித்து 100.66 என்ற அற்புதமான சராசரியை தன்வசம் வைத்துள்ளார். எனவே இன்றைய போட்டியில் இவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.

ராபி உத்தப்பா மற்றும் நிதிஷ் ராணா கொல்கத்தா அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் இவர்களது அதிரடி தொடரும்.

ஆண்ட்ரே ரஸல் இந்த சீசனில் கொல்கத்தா அணி சார்பில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்தாக ப்யுஸ் சாவ்லா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இன்றைய போட்டியில் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை தங்களது பௌலிங்கில் இவர்கள் இருவரும் அளிப்பார்கள் என தெரிகிறது.