Sports

IPL 2019 : தவான் அதிரடியால் கொல்கத்தாவை எளிதில் வென்றது டெல்லி அணி !

ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மதம் 23 ஆம் தேதி தொடங்கி நடைப் பெற்று வருகிறது.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின. கொல்கத்தா அணியில் லின்,சுனில் நரேன்,சாம் கர்னி ஆகியோருக்கு பதில் பிராத்வைட்,ஜோ டென்லி,லாகி பெர்குசன் விளையாடினர்.டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ டென்லி, ஷுப்மன் கில் களமிறங்கினர்.முதல் பந்தில் ஜோ டென்லியை அவுட்டாக்கி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி அளித்தார் இஷாந்த் சர்மா. அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா கில்லுடன் நிதானமாக ஆடினார். உத்தப்பா 28 ரன்னிலும், நிதிஷ் ரானா 11 ரன்னிலும் அவுட்டாகினர்.தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் அவுட்டானார்.

Shubman Gill

சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஐ.பி.எல்.லில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் ஆண்ட்ரே ரசல் இன்றும் தனது அதிரடியை தொடர்ந்தார். ரசல் 21 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 45 ரன்னில் வெளியேறினார்.

Andre Rusell

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்திருந்தது.டெல்லி அணி சார்பில் கிறிஸ் மாரிஸ், ரபடா, கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். பிரித்வி ஷா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் ஆட்டமிழந்தார்.

Shikar Dhawan

அடுத்ததாக ஷிகர் தவான், ரிஷப் பன்ட் ஜோடி, கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சிதறடித்தது. ரிஷப் பந்த் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடியாக ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் டெல்லி அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தவான் 97 ரன்களிலும் இங்ராம் 14 ரன்கள் களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இந்த போட்டியில் தோற்றாலும் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாமிடத்தில் உள்ளது.