Sports
பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நேற்றிரவு நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பர்தீவ் படேல், கோலி ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருவரும் பவர்ப்ளே வரை பவுண்டரிகள் அடித்து ரன்களை வேகமாகச் சேர்த்தனர். இதனால் பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்தது.
7-வது ஓவரை ஸ்ரேயாஸ் கோபால் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் கோலி க்ளீன் போல்டாகி 23 ரன்களில் வெளியேறினார். கடந்த ஐபிஎல் முதல் சர்வதேச கிரிக்கெட்டிலும் விராட் கோலி லெக் ஸ்பின்னரிடம் ஆட்டமிழப்பது நடந்து வருகிறது, ஆடம் ஸாம்ப்பாவை கோலியினால் சரியாக ஆட முடியாததை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பார்த்தோம்.
அடுத்த வந்த டவில்லியர்ஸ்(13), ஹெட்மயர்(1) நிலைக்கவில்லை. ஸ்ரேயாஸ் கோபாலின் 9-வது ஓவரில் கோபாலிடமே கேட்ச் கொடுத்து டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார், 11-வது ஓவரில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஹெட்மயர் வெளியேறினார். 73 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்தது.
பர்தீவ் படேலுடன், ஸ்டோனிஸ் இணைந்தார். விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில் பர்தீவ் நிதானமாக பேட் செய்தார். தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பவுண்டரிகளை அடித்தார். 29 பந்துககளில் பர்தீவ் படேல் அரைசதம் அடித்தார்.
ஆர்ச்சர் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து பர்தீவ் படேல் 67 ரன்கள் சேரத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். 4-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த மொயின்அலி, ஸ்டோனிஸுடன் சேர்ந்தார். ஸ்டோனிஸ் 31 ரன்களிலும், மொயின் அலி 18 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.20ஓவர்களில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பட்லர், ரஹானே நல்ல தொடக்கத்தை அளித்தனர். பட்லர் தனக்கே உரிய அதிரடியில் பவுண்டரிகளை விளாசி ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் சேர்த்தது. சைனி வீசிய 2-வது ஓவரில் ரஹானேவுக்கான கேட்ச் வாய்ப்பை கோலி கோட்டைவிட்டார்.
சாஹல் வீசிய 8-வது ஓவரில் ரஹானே 22 ரன்களில் எல்பிடபில்யு முறையில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஸ்மித் களமிறங்கினார்.பட்லரும், ஸ்மித்தும் ரன்ரேட் குறையாமல் பேட் செய்தனர். அவ்வப்போது பவுண்டரிகளை அடித்த பட்லர் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜெய்ப்பூர் மைதானத்தில் பட்லர் தொடர்ந்து அடிக்கும் 4-வது அரைசதம் இதுவாகும்.
சாஹல் வீசிய 13-வது ஓவரில் ஸ்டோனிஸடம் கேட்ச் கொடுத்து 59 ரன்களில் பட்லர் ஆட்டமிழந்தா். இதில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கும்.அடுத்துவந்த திரிபாதி, ஸ்மித்துடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றி அருகே அழைத்துச் சென்றனர். கடைசி இரு ஓவர்களில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்மித் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. யாதவ் பந்துவீச திரிபாதி எதிர்கொண்டார். முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் ஒருரன்னும் எடுத்தனர். 3-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தில் ஒருரன் எடுத்தார் ஸ்டோக்ஸ். 5-வது பந்தில் திரிபாதி மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.
திரிபாதி 34 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.5 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஆர்சிபி அணி தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஸ்ரேயாஸ் கோபால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப் பட்டார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?