Sports
ஐ.பி.எல் 2019 ; ஐதராபாத் அணி அசத்தல் வெற்றி
ஐ.பி.எல் லின் 12 வது சீசன் கடந்த 23 அம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த எட்டாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்து தோல்வியடைந்தது. இந்நிலையில் இதில் ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.சிறிது நேரத்திலே ஜாஸ் பட்லர் ரஷீத் கான் பந்தில் அவுட்டானார்.இதையடுத்து இணைந்த கேப்டன் ரகானே (70), சாம்சன் (102*) ஆகியோரின் அதிரடியால் , அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது.
199 என்ற கடின இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு, வார்னர் (69), பேர்ஸ்டோவ் (45) அதிரடி துவக்கம் தந்தனர்.இந்த ஜோடி முதல் விகேட்க்கு 110 ரன்கள் சேர்த்தது.பின் வந்த கேப்டன் வில்லியம்சன் (14) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த விஜய் சங்கர் (35) ஓரளவு கைகொடுத்தார். மனிஷ் பாண்டே 1 ரன்னுக்கு அவுட்டானார்.
கடைசி நேரத்தில் யூசுப் பதான் அதிரடி காட்ட, ஹைதராபாத் அணி வெற்றிக்கு 12 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் ஆர்சர் வீசிய 19வது ஓவரில் ரசித் கான் தலா 1 பவுண்டரி, 1 சிக்சர் விளாச, ஹைதராபாத் அணி, 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.ஆட்டநாயகனாக ரஷீத் கான் தேர்வு செய்ய பட்டார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?