Sports
ஐ.பி.எல் 2019 ; பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா
2019 ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் பௌலிங்கை தேர்வு செய்தார்.பஞ்சாப் அணி 4 மாற்றங்களுடனும், கொல்கத்தா அணி மாற்றம் ஏதுமின்றியும் களமிறங்கின.
தொடக்க வீரர்களான லின் மற்றும் நரேன் களமிறங்கினர். அதிரடி காட்டிய நரேன் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார்.அதன் பிறகு களமிறங்கிய நிதிஷ் ராணா மற்றும் ராபின் உத்தப்பா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதிரடியாக ஆடிய ராணா அரைசதத்திற்கு பின் ஆட்டமிழந்தார்.அதன்பின் களமிறங்கிய ரசல் 3 ரன்கள் எடுத்திருந்த போது சமி வீசிய யார்க்கரில் போல்ட் ஆனார்.
லெக்திசையில் நின்றிருந்த நடுவர் ஷமி வீசிய அந்த பந்தை நோ-பால் என்று அறிவித்தார். இதனால், ரஸல் ஆட்டமிழந்து வெளியேறுவதில் இருந்து தப்பித்தார். வழக்கமாக 30-யார்ட் வட்டத்துக்குள் 4 பீல்டர்களை நிறுத்த வேண்டும். ஆனால், கேப்டன் அஸ்வின் 3 பீல்டர்களை மட்டுமே நிறுத்தியதால், ரூல்ஸ்படி, அந்த பந்தை நடுவர் நோ-பால் என்று அறிவித்தார்.நோ-பால் அறிவிக்கும்போது, ரஸல் களத்தில் 3 ரன்களோடு இருந்தார்.
அதன்பிறகு பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தெறிக்க விட்ட ரஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். கடைசி 19 பந்துகளில் ரஸலின் அதிரடியால், கொல்கத்தா அணி 56 ரன்கள் குவித்தது.ஆட்டத்தின் திருப்பு முனையாக இந்த நோபால் அமைந்தது.உத்தப்பா 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் தரப்பில் ஷமி, டை, சக்ரவர்த்தி, வில்ஜோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது.ஆட்டத்தின் தொடக்கத்தில் ராகுல் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதை அடுத்து களம் இறங்கிய மயான்க் அகர்வால் நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடி காட்டிய கிரிஸ் கெய்ல் 20 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து களம் இறங்கிய சர்ஃப்ராஷ் கான் 13 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் நிலைத்து விளையாடினார். நிலைத்து விளையாடிய மயான்க் அகர்வால் 58 ரன்கள் எடுத்து பியுஷ் சாவ்லா பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய மந்தீப் சிங் நிலைத்து விளையாட அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் அரைசதம் வீளாசினார்.பஞ்சாப் அணியால் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது,இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா . கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!