Sports
ஐ.பி.எல் 2019; கொல்கத்தாவை எதிர்கொள்ளும் பஞ்சாப்
ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறதுஇந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.இரு அணிகளும் ஏற்கனவே தலா ஒரு போட்டியில் விளையாடி வெற்றிப் பெற்றுள்ளது.
பஞ்சாப் தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.அப்போட்டியில் ராஜஸ்தான் வீர புட்லரை அஸ்வின் 'மன்கட்' முறையில் அவுட்டாகியது பெரும் சர்சசையை கிளப்பியது.ராஜஸ்தானுடனான போட்டியில் க்றிஸ் கெயில் மற்றும் சர்பராஸ் கான் பேட்டிங்கில் ஜொலித்தனர்,பௌலிங்கில் அஸ்வின்,சமி,முஜீப் ஆகியோர் கை கொடுத்தனர்.போன போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சாம் காரனுக்கு பதில் ஆண்ட்ரு டை களமிறங்குவார் என எதிர்பார்க்கக்ப்படுகிறது.
கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.அந்த போட்டியில்,நித்திஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், சுப்மான் கில் ஆகியோர் தங்களது அதிரடியால் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.விரலில் ஏற்பட்ட காயத்தினால் போன ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வராத சுனில் நரேன்,காயத்திலிருந்து மீண்டு விட்டார்.எனவே,கொல்கத்தா அணி எவ்வித மாற்றங்களின்றி களம் காணும் என் எதிர்பார்க்கப் படுகிறது.
பஞ்சாப் உத்தேச அணி ;
கிறிஸ் கெயில்,கே.எல்.ராகுல்,மயங் அகர்வால்,சர்பராஸ் கான்,மன்தீப் சிங் /கருண் நாயர் ,நிகோலஸ் பூரான்,அஸ்வின்,ஆண்ட்ரு டை,சமி,முஜீப்,அங்கித் ராஜ்பூட்.
கொல்கத்தா உத்தேச அணி ;
கிறிஸ் லின்,சுனில் நரேன்,ராபின் உத்தப்பா,நிதிஷ் ராணா,சுப்மன் கில்,தினேஷ் கார்த்திக்,ஆண்ட்ரே ரசல்,பியூஷ் சாவ்லா,குல்தீப் யாதவ்,லாக்கி பெர்குசன்,பிரஷித் கிருஷ்ணா.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!