Sports
ஐ.பி.எல் 2019 ;ராஜஸ்தானுடன் மல்லுக்கட்டும் பஞ்சாப்
ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், சன்ரைசர்ஸை வீழ்த்தி கொல்கத்தா அணியும், மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸும் வெற்றி பெற்றுள்ளன.நான்காவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே இன்று நடக்கிறது. .
இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி, கடந்த சீசனில் அஷ்வின் தலைமையில் அபாரமாக ஆடியது. முதல் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய அந்த அணி, லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் சொதப்பியதால் தொடர் தோல்விகளை தழுவி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
இம்முறை கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. அஷ்வின் தலைமையிலான அணியில் ராகுல், கெய்ல் ஆகிய அதிரடி வீரர்கள் ஏற்கனவே உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் நிகோலஸ் பூரானை அந்த அணி எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் கெய்ல், பூரான், சாம் கரன், முஜீபுர் ரஹ்மான் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது.
ராகுல், மயன்க் அகர்வால், கருண் நாயர் ஆகிய மூன்று கர்நாடகாவை சேர்ந்த வீரர்களும் இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு மிகவும் உதவிகரமாக இருப்பர். இவர்கள் மூவருமே அணியில் இருப்பர். மேலும் அதிகபட்ச தொகை கொடுத்து அந்த அணி ஏலத்தில் எடுத்த தமிழக மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியும் இந்த போட்டியில் ஆடுவார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமியும் அங்கித் ராஜ்பூத்தும் இருப்பர்.
உத்தேச பஞ்சாப் அணி:
கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், மயன்க் அகர்வால், கருண் நாயர், சாம் கரண், அஷ்வின்(கேப்டன்), வருண் சக்கரவர்த்தி, முஜீபுர் ரஹ்மான், முகமது ஷமி, ராஜ்பூத்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்மித் விளையாடவில்லை. ஆனால், வங்கதேசத்தில் நடந்த பிபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தும், முழங்கை காயத்தால் விலகினார்.ஒரு ஆண்டு தடைக்கு பிறகு ஸ்மித் பங்கேற்றும் தொடர் ஐபிஎல் போட்டியாகத்தான் இருக்கும்.ஸ்டீவ் ஸ்மித் வருகைக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பலம் பெற்றுள்ளது.இது நிச்சயம் அஸ்வின் தலைமையிலான அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.
இதுதவிர பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இருப்பது அணிக்கு கூடுதல் வலிமை.பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் முக்கிய துருப்பாக இருப்பார், மேலும் சாம் கரன், சஞ்சு சாம்ஸன், ஆஸ்டன் டர்னர், ஸ்ரேயாஸ் கோபால் என பேட்டிங் வரிசைக்குப் பலம் சேர்க்கின்றனர்.பந்துவீச்சில் ஜெயதேவ் உனத்கத், வருண் ஆரோன், தவால் குல்கர்னி, ஜோப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி, பென் ஸ்டோக்ஸ் என பல்வேறு வகைகளில் பந்துவீசும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆதலால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகுந்த வலிமையுடன் தனது முதல் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் உத்தேச அணி ;
ரஹானே,ஸ்மித்,பட்லர்,ஸ்டோக்ஸ்,சஞ்சு சாம்சன்,ராகுல் திரிபாதி,கிருஷ்ணப்பா கௌதம்,ஷ்ரேயாஸ் கோபால்,ஜெயதேவ் உனட்கட்,தவால் குல்கர்னி,ஜோப்ரா ஆர்ச்சர்
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!