Politics
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
நேற்று நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வு தொடங்கியது. அப்போது திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சர் ஷோபா கராந்த்லாஜேவிடம் "சென்னையை அடுத்த திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கனரக, நடுத்தர மற்றும் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்தத் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வசதிகள் உரிய முறையில் பெற வேண்டியதைக் கருத்தில் கொண்டு திருப்பெரும்புதூரில் மருத்துவமனையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா?
அப்படி என்றால் அதன் முழு விவரங்கள் என்ன? மருத்துவமனை அமைத்திடும் திட்டம் ஏதும் இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன? மருத்துவமனை வசதிகள் அமைப்பதில் தாமதமாவதற்கு என்ன காரணம்?" என்று பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஷோபா கராந்த்லாஜே , மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் “திருப்பெரும்புதூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை உடனடியாக அமைக்க இ.எஸ்.ஐ. நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
ரூ.178 கோடி ரூபாயில் மருத்துவமனை வசதிகள் உருவாக்கப்படும். இது தொடர்பாக உரிய நிதி அனுமதி இ.எஸ்.ஐ. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் மத்திய பொதுப்பணித் துறையின் பொறுப்பில் விடப்பட்டு அதற்கான ஆணையும் தரப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பெரும்புதூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க டி.ஆர்.பாலு எம்.பி தொடர்ந்து ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திருப்பெரும்புதூரில் அமைக்க ஒன்றிய அரசும், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனமும் முன்வந்தள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!