Politics
“பேரம் பேசக்கூடிய கூட்டணியாக எதிர்க்கட்சி கூட்டணிகள் அமைந்துள்ளது!” : துணை முதலமைச்சர் உதயந்தி கண்டனம்!
நாகப்பட்டினம் மாவட்டம் வி பி என் திருமண மண்டபத்தில் கழக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் அக்கரைப்பேட்டை மனோகர் - அழியநதி ஆகியோரின் மகன் மருத்துவர் குறளரசன், சந்திரன் - சத்யா ஆகியோரின் மகள் மருத்துவர் பிருந்தாஞ்சலி ஆகியோரின் திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கழக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கள் குறளரசன் - பிருந்தாஞ்சலி ஆகியோரை வாழ்த்தினார்.
அதன் பிறகு, விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நாகை மாவட்டம் மீனவர்களும் விவசாயிகளும் அதிக அளவில் நிறைந்த ஒரு மாவட்டம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீங்கள் மக்களின் காவலன் என்றே கூறலாம். தமிழகத்தில் பேரிழப்புகள் ஆபத்து காலங்களில் முதலில் களத்துக்கு வரக்கூடிய மக்கள் மீனவ மக்கள்தான் அவர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மந்திரங்கள் எதுவும் கூறாமல் தமிழ் பண்பாட்டு அடிப்படையில் சுயமரியாதை திருமணம் நடத்தப்பட்டுள்ளது. முன்பு இந்த சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் என்ற ஒன்று கிடையாது. ஆனால் முதன்முதலாக பேரறிஞர் அண்ணா சட்ட வடிவத்தினை கொண்டு வந்தார். நூற்றாண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி கிடையாது படிக்கவும் அனுமதி கிடையாது. இவற்றையெல்லாம் மாற்றியது தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் திராவிட முன்னேற்றக் கழகமும் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்.
இன்றைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியில் நமது தமிழ்நாடு முதலமைச்சர். அதன் காரணமாக தான் அதிக அளவில் பெண்களுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்து கொண்டு வருகிறார். இதன் காரணமாக தான் பெரும்பாலான மாநகரங்களில் மேயர்கள் பெண்களாக உள்ளார்கள். மகளிருக்கென பல்வேறு திட்டங்களை நமது தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு மிகப்பெரிய உதாரணம் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நமது தலைவர் போட்ட முதல் கையொப்பம் பெண்களுக்கான இலவச பயணம் திட்டம் தான். அதனைத் தொடர்ந்து புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நமது முதலமைச்சர்கள் இந்தியாவில் முதன் முதலாக வழங்கி வருகிறார்.
1 கோடியே 16 லட்சம் பேருக்கு மாத மாதம் கலைஞர் உரிமைத்தொகை என்கின்ற பெயரில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக சென்று கொண்டிருக்கிறது. இதெல்லாம் பார்க்கும் பொழுது எதிர்கட்சியினருக்கு பொறாமையாக தான் இருக்கக்கூடும். தினம் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் பயங்கரமான வயத்தெரிச்சல்.
அரசு கொண்டு வரக்கூடிய அனைத்து திட்டங்களுக்கும் முத்தமிழ் கலைஞரின் பெயரை வைப்பது ஏன் என அவர் கேட்கும் பொழுது மக்களின் நலனுக்காக அயராது காலம் முழுவதும் உழைத்தவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பதை மறந்துவிடக்கூடாது. மீண்டும் தமிழ்நாட்டில் நமது தலைவர் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கப்படும்.
ஆனால் எதிர்க்கட்சி நிலைமையை யோசித்துப் பாருங்கள். அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் ஒன்று கூறுகிறார். அதிமுக கூட்டணிக்கு அழைத்தால் பெரும் பேசுகிறார்கள் என்று கூறுகிறார். இதுபோல தான் பேரம் பேசக்கூடிய கூட்டணியாக எதிர்க்கட்சி கூட்டணிகள் அமைந்துள்ளது. ஆனால் நமது கூட்டணி வெற்றிக்கான கூட்டணி அனைவருக்கும் சம உரிமை அளிக்கக்கூடிய கூட்டணி.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பொதுமக்கள் 100 சதவீத ஆதரவினை அளித்தார்கள். அதே போல் இந்த முறை வருகின்ற இடைத்தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை குறிப்பாக வெற்றி பெறுவோம். மணமக்கள் இருவரும் தங்களுக்கு பிறக்கக்கூடிய பிள்ளைகளுக்கு தமிழ் மொழி சார்ந்த பெயரை வைக்க வேண்டும்” என்றார்.
Also Read
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மகாராஷ்டிரா - INSTA-வில் 5.6M Followers.. தேர்தலில் பெற்ற வாக்குகளோ 155.. யார் இந்த BIGG BOSS அஜாஸ் கான்?