Politics

மகாராஷ்டிரா - INSTA-வில் 5.6M Followers.. தேர்தலில் பெற்ற வாக்குகளோ 155.. யார் இந்த BIGG BOSS அஜாஸ் கான்?

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்களும், நாடு முழுவதும் 46 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 2 மக்களைவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களின் வாக்கு எண்னிக்கை நேற்று (நவ.23) ஒரே கட்டமாக நடைபெற்று வெளியானது.

இதில் ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அதே போல் மகாராஷ்டிராவின் நன்தேட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவான் ரவீந்திர வசந்த்ராவும் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில் இந்த தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. அஜாஸ் கான் ஒரு நடிகராவார். இவர் இந்தி பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானார். பிக் பாஸை தொடர்ந்து அரசியலில் குதித்த இவர், ஆசாத் சமாஜ் (கன்சி ராம்) கட்சியில் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத்த தேர்தலில் மகாராஷ்டிராவின் வெர்சோவா (VERSOVA) தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள சிவ சேனா(உத்தவ் பிரிவு) வேட்பாளர் ஹரூன் கான் வெற்றி பெற்றுள்ளார். இந்த சூழலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்ற பட்டியலில் பிக்பாஸ் பிரபலம் அஜாஸ் கான் உள்ளார்.

ஆசாத் சமாஜ் (கன்சி ராம்) கட்சி சார்பில் போட்டியிட்ட அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இது தற்போது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: திராவிட மாடலின் ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் 1.8 கோடி பேர் பயன் : அப்பாவு புகழாரம்!