Politics
அதிமுக ஆட்சியில் 1 லட்சம் கொலைகள் - திமுக ஆட்சியில் கொலைகள் கட்டுக்குள் வந்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
2011 - 2021க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சி செய்த போது, தமிழ்நாட்டில் நடந்த கொலைகளும், கொள்ளைகளும் ஏராளம். இதனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.
அவ்வகையான தோல்வி ஆட்சியை வழங்கியவர்கள், தற்போது சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தும் தி.மு.க அரசை விமர்சித்து வருகிறார்கள் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தியாளார் சந்திப்பில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாவது, “தனிப்பட்ட விவகாரத்தில் நடைபெறும் கொலைகளுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை கூட அறியாதவராய் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு, சட்டம் ஒழுங்கைப் பற்றி அறிக்கை விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தேர்தல் நேரத்தில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான சி.பி.ஐ விசாரணை எந்த நிலையில் உள்ளது? கண்டெய்னர் லாரியில் பிடிபட்ட பணம் யாருடையது என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்துவிட்டதா?
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் யாருடைய ஆட்சியில் நடைபெற்றது? சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்!
அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற 2020ஆம் ஆண்டில் மட்டும் 1,252 கொலைகள் நடைபெற்றது. குறிப்பாக, அதிமுக ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளில் 1 இலட்சம் கொலைகள் பதிவாகியுள்ளதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். இவையெற்றல்லாம் ஒப்பிடுகையில், தி.மு.க ஆட்சியில் கொலைகள் குறைந்து கொண்டே வருகிறது. முதலமைச்சரின் தொலைநோக்கு நடவடிக்கைகளால், ரெளடிசம் தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்துள்ளது.”
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!