Politics
கோவையில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக வதந்தி : அம்பலமான தினமலரின் பொய் செய்தி !
கோவையில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்துகள் குறைக்கப்பட்டதாகத் தினமலர் பொய் செய்தி செய்தி வெளியிட்டது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் பலரும் அரசை விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.
இது குறித்து தினமலரில் வெளியான செய்தியில், கோவையில் சரவணம் பட்டியையும் துடியலூரையும் இணைக்கும் வழித்தடத்தில் 8 தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதால் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட 3 சாதாரண பேருந்துகளின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது தினமலர் வழக்கமாக செய்யும் அவதூறுதான் என்றும், தினமலரில் வெளியான இந்த செய்தி முற்றிலும் தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில்,
" 'கோவையில் சரவணம் பட்டியையும் துடியலூரையும் இணைக்கும் வழித்தடத்தில் 8 தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதால் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட 3 சாதாரண பேருந்துகளின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தினமலர் செய்தியில் வெளியாகியுள்ளது.
இது முற்றிலும் பொய்யான செய்தி , கோயம்புத்தூர் மாவட்டத்தில் 422 மகளிர் மகளிர் கட்டணமில்லாப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் ஏற்கனவே உள்ள சொகுசு கட்டணப் பேருந்துகளாக(Red Bus) இயக்கப்பட்டு வந்த பேருந்துகளுக்குப் பதிலாக மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் எதுவும் குறைக்கப்படவில்லை'என்று கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”மணிப்பூர் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்” : குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
-
யார் உங்களுக்கு ரூ.5 கோடி பணம் அனுப்பியது? : பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!
-
"பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது" - திருமாவளவன் விமர்சனம் !
-
”விமானத்தை கண்டுபிடித்தது இவர்தான், ரைட் சகோதரர்கள் அல்ல” : ஆளுநர் ஆனந்திபென் படேல் பேச்சு!
-
நாட்டின் பன்முகத்தன்மையை உணர்ந்து செயல்படுங்கள் : நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி MP மின்னஞ்சல் !