Politics
"இந்தி மொழி கொடுங்கோன்மையை ஒன்றிய அரசு உடனே நிறுத்தவேண்டும்" - முதலமைச்சர் கண்டனம் !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
அதிலும், மொழி மாற்றும் பிரிவில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே, ஆங்கிலத்தில் இணையதளத்தை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தி பேசாத மக்கள் LIC இணையதளத்தை கையாள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் இந்த் நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், "LIC-யின் இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தை இந்தி திணிப்புக்கு ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்வதற்கான விருப்ப பட்டனை கூட இந்தி மொழியிலேயே அமைத்திருக்கிறது. ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களின் மீது இந்தி மொழியை தொடர்ந்து திணித்து வருகிறது. இந்த இந்தி மொழி கொடுங்கோன்மையை ஒன்றிய அரசு உடனே நிறுத்தவேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
"பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது" - திருமாவளவன் விமர்சனம் !
-
”விமானத்தை கண்டுபிடித்தது இவர்தான், ரைட் சகோதரர்கள் அல்ல” : ஆளுநர் ஆனந்திபென் படேல் பேச்சு!
-
கோவையில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக வதந்தி : அம்பலமான தினமலரின் பொய் செய்தி !
-
நாட்டின் பன்முகத்தன்மையை உணர்ந்து செயல்படுங்கள் : நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி MP மின்னஞ்சல் !
-
ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக “Swami Chatbot” செயலி... முதலமைச்சர் கோரிக்கையின் பேரில் நடவடிக்கை !