Politics
“எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராக சீமான் இருப்பது வருத்தமளிக்கிறது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து இன்னுயிர் காப்போம் திட்டமான நம்மை காக்கும் 48 என்ற சாலை விபத்துக்கான 48 மணி நேர கட்டணமில்லா சிகிசிச்சை மூலம் பயனடைந்த மூன்றாவது லட்சம் நபரான அரக்கோணம் தேன்மொழியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” இன்னுயிர் காப்போம் திட்டமான நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் பயன் அடைந்த மூன்றாவது லட்சம் நபரான அரக்கோணம் தேன்மொழியை சந்தித்து பேசினோம். இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக அரசு செயல்பட்டுத்திய தொகை 261 கோடியே 46 லட்சம் ரூபாய் ஆகும்.
தமிழகத்தில் மருத்துவத்துறையில் 6744 நிரந்தர பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளது. 18 ஆயிரத்து 460 பணியிடங்கள் இதுவரை நிரப்பி இருக்கிறோம். ஆனால் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காலிபணியிடங்கள் குறித்து எதும் தெரியாமல் அறிக்கை விடுகிறார். எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத தலைவராய் சீமான் இருப்பது வருத்தமளிக்கிறது.
2353 பணியிடங்களை நிரப்ப 23,917 விண்ணப்பங்கள் பெற பட்டுள்ளது. இவர்களின் தகவல்கள் சரி பார்க்க பட்டு வருகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் ஜனவரி 27 ஆம் தேதி ஒரே கட்டமாக ஆன்லைன் தேர்வு நடைபெறும். தேர்வு நடத்திய பிறகு அதில் இருந்து முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி காலி பணியிடங்களை நிரப்ப படும்
உயர் நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்னும் கருத்து ஏற்புடையதல்ல. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 1002 மருத்துவர்கள் உட்பட செவிலியர்கள் தொடங்கி பாதுகாவலர்கள் வரை 4870 பேர் பணியில் உள்ளனர். 15 ஆயிரம் வரை புறநோயாளிகளாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நோயளிகள் வருகிறார்கள். 2021 ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த எண்ணிக்கையை பாருங்கள். யாரும் யாரையும் பதட்ட படுத்த வேண்டாம். பணியிடத்தை நிரப்பு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் அவரது முன்னாள் அமைச்சர்கள் இதுவரை எந்த மருத்துவமனைக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்யவில்லை. இதுவரை 500க்கும் மேற்பட்ட விருதுகளை சுகாதாரத் துறை பெற்று இருக்கிறது. ஐநா சபையே விருது தந்த இந்த துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் அறிக்கை விட்டிருக்கிறார்.
டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு இருந்து கொண்டிருக்கிறது. இது கூட தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார். மற்ற ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு கட்டுபாட்டில் அரசின் நடவடிக்கைகள் குறித்த எதிர்க்கட்சித் தலைவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நேரத்தையும் இடத்தையும் நீங்கலே குறித்து சொல்லூங்கள். உங்களுடன் எத்தனை பேர் வேணாலும் அழைத்துக் கொண்டு வாருங்கள் உங்கள் முன்னாள் அமைச்சர்களை அழைத்து வருங்கள் நான் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்தார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!