Politics

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" - ஐ.நா சபையில் ஒலித்த தமிழர் குரல்... திருச்சி சிவா எம்.பி பேசியது என்ன ?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 79வது கூட்டம் வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் மாநிலங்களவை திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா உள்பட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பெண்களுக்காக அதிகாரம், இளைஞர்கள் குறித்து நான் கவனம் செலுத்தி பேசுகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் 25 கோடி மக்கல் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், நாங்கள் நிலையான வளர்ச்சியை பெற்று எங்கள் அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

அதோடு இறுதியாக "யாதும் ஊரே, யாவரும் கேளிர். உலகமே ஒரே குடும்பம்தான். அதன் காரணமாக உலகில் உள்ள அனைவரும் நம் சொந்தங்கள்தான்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். அவரின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read: ”திராவிட மாடல் அரசின் Brand Ambassadors மக்கள்தான்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!