Politics
“வாழ்க வசவாளர்கள்!” : விமர்சிப்பவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
தமிழ்நாட்டின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் திறப்பு, 350 பெண்களுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் 107 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி மற்றும் 2,493 பேருக்கு கண் பரிசோதனை செய்து மூக்கு கண்ணாடி மற்றும் புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதனிடையே, நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் அரசு ஆட்சிப்பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் முன்மொழிந்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா நிலைகளிலும் தகுதி உடையவர்களாக மாற்றுவது தான் திராவிட மாடல் அரசின் லட்சியம். அதற்கான திட்டங்கள் தான் இவை எல்லாம். ஆனால், நம் ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறை கூறுபவர்கள், நம் திட்டங்களை பார்க்க வேண்டும்.
ஆனால், புதிது, புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாரும் திமுக அழிய வேண்டும் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு பணியாற்றுவதற்கே எங்கள் நேரம் முழுவதையும் செலவிடுகிறோம். இவர்களுக்கு பதில் சொல்வதற்கெல்லாம் எங்களுக்கு நேரமுமில்லை, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!