Politics
“தேவை மற்றும் சேவையை உணர்ந்து செயல்படுகிறோம்!” : ராமதாஸின் சர்ச்சைக் கருத்திற்கு அமைச்சர் பதிலடி!
பா.ம.க நிறுவன தலைவர் ச.ராமதாஸ், தமிழ்நாடு அரசு வழங்கிய போனஸ் தொகை ஒதுக்கீட்டை விமர்சித்ததற்கு, அமைச்சர் சா.சி.சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சரின் சீரிய தலைமையில் தமிழ்நாட்டில் மிக சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார்கள். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரழித்து சென்றுள்ள நிலையில், இந்த அரசானது பொதுமக்களின் போக்குவரத்துத் தேவை மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைப்பு செய்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருகின்ற நிலையிலும், முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 741, C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு, 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஆணை எண்: 310, நிதித் துறை நாள்: 14/10/2024, வாயிலாக, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண்: 124, போக்குவரத்துத் துறை நாள்: 25/10/2024 ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.182.32 கோடி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்தும், அறியாததுபோல மருத்துவர் ச.ராமதாஸ் அவர்கள் X-தளத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கடந்த ஆண்டை விட தீபாவளி விற்பனை ரூ.10 கோடி அதிகம் : சாதனை படைக்கும் ஆவின் நிர்வாகம் !
-
ஒரே நாளில் 2.31 இலட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்! : தீபஒளித் திருநாள் எதிரொலி!
-
திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
-
ஒரே நேரத்தில் இரு கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள்! : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
-
“முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் செயல்களையும் – திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்!”: முதலமைச்சர் உறுதி!