Politics
ரூ. 300க்கு காசோலையா? : உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய சிரிப்பலை!
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் விளங்குகிறது. அதன் காரணமாகவே, அம்மாநிலத்தில் என்றும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு.
அதில் முதன்மை நடவடிக்கைகளாக ராமர் கோவில் கட்டமைப்பு, பாபர் மசூதி புறக்கணிப்பு, மதத்தின் பெயரிலான ஆட்சி, காவல்துறைகளுக்கு அமாவாசை, பௌர்ணமியை பார்த்து விசாரணை மேற்கொள்ள ஆணையிடுவது, விவசாய வஞ்சிப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இது போன்ற நடவடிக்கைகளால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் முன்னணி மாநிலம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது உத்தரப் பிரதேசம்.
குறிப்பாக, ராமர் கோவில் திறப்பிற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பது, கல்வியை இரண்டாவதாக்கி, மதத்தை முதன்மைப்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மற்றொரு செயல், உத்தரப் பிரதேச மக்களை கோவப்படுவதா? அல்லது சிரிப்பதா? என்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறோம் என்ற பெயரில் விழா எடுத்து, கடுமையான விலைவாசி உயர்வு இருக்கிற காலகட்டத்தில் ரூ. 300க்கான காசோலையை வழங்கியிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
மாணவர்களின் அடிப்படைத் தேவையை கூட, பூர்த்தி செய்ய இயலாத ரூ. 300-ஐ வழங்குவதற்கு ஏன் இவ்வளவு ஆடம்பரம் என பல்வேறு தரப்பினர், யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கைக்கு தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றன.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!