Politics

தமிழ்நாடு அரசு குறித்து ஆளுநர் குறித்த பொய்யை அம்பலப்படுத்திய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்... விவரம் உள்ளே !

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில காவல்துறை ஒரு கிராம் போதை பொருளை கூட கைப்பற்றவில்லை என்றும், அதே நேரத்தில் ஒன்றிய அரசின் முகமைகள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் போதைப்பொருளைக் கைப்பற்றியதாக கூறினார்.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்து பொய்யானது என்றும் , தமிழ்நாடு காவல்துறை நூற்றுக்கணக்கான போதைப்பொருள்களை தமிழ்நாடு முழுவதும் கைப்பற்றியுள்ளது ஆதாரத்தோடு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பகிரங்கப்படுத்தியுள்ளது.

இது குறித்து வெளியான செய்தியில், செப்டம்பர் 2023 இல், ராமநாதபுரத்தில் 6 கிலோ போதைப்பொருள் தமிழ்நாடு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போதைப்பொருள்கள் ,பெங்களூரில் இருந்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல மார்ச் 2023 இல், மணிப்பூரில் உள்ள மோரேயில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தப்பட்ட 9 கிலோ போதைப்பொருளை சென்னை போலீசார் கைப்பற்றினர். இதே போல 2024 ஆம் ஆண்டில் காவல்துறையினர் நாகப்பட்டினத்தில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள 75 கிலோ ஹாஷிஷ் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

2021ஆம் ஆண்டு முதல் 92.7 கிலோ ஹாஷிஸ், 43.227 கிலோ ஹெராயின் மற்றும் 0.489 கிலோ அபின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆளுநரின் கருத்து முழுக்க முழுக்க தவறானது என்பது உறுதியாகியுள்ளது.

Also Read: தமிழ்நாட்டு மக்களின் வெற்றி குறித்து உங்களுக்கு என்ன தெரியும் ? - RN ரவிக்கு கேரளா காங்கிரஸ் பதிலடி !