Politics
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் : வினேஷ் போகத் வெற்றி... பாஜக வேட்பாளரை வீழ்த்தி அபாரம் !
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிடியில் இந்திய வீரர் வினேஷ் போகத் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார்.பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் அவர் தங்கம் அல்லது வெள்ளி வெல்வது உறுதியான நிலையில், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொடருக்கு முன்னதாக பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து கடந்த ஆண்டு டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வினேஷ் போகத் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், அதன் காரணமாக அவருக்கு ஆதரவாக இந்திய ஒலிம்பிக் சங்கம் நிற்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக பங்கேற்ற வினேஷ் போகத், பின்னர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியது.
இந்த நிலையில், அவர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில், வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 5763 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!