Politics
முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி? : அரியானாவில் உடையும் மோடி மோகம்!
இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த உழவர்கள் போராட்டம், உயிர்த்தெழ முக்கிய பங்குவகித்த மாநிலமாக பஞ்சாப்பிற்கு அடுத்தப்படியான அரியானா மாநிலம் அமைந்துள்ளது.
அப்படியான அரியானாவின் முதன்மைத் தொழிலாக உழவுத்தொழில் கருதப்படும் நிலையிலும், உழவர்கள் மீது பா.ஜ.க அரசு அவிழ்த்துவிட்ட வன்முறை, கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இரு சட்டப்பேரவைத் தேர்தல்களில், அரியானா மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்திருந்தும், வறுமைக் கோட்டில் இருப்பவர்களுக்கும், உழவர்களுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் மோடி அரசால் முன்னெடுக்கப்பட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாய் அமைந்தன.
குறிப்பாக, அரியானா மாநிலத்தின் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான நூக் நகரத்தில், சுமார் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது அரியானா பா.ஜ.க அரசு.
இதனிடையே, ஒன்றிய பா.ஜ.க.வின் புறக்கணிப்பு வேறு. இது போன்ற வஞ்சிப்புகள் 10 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டன. இதனால், மக்கள் அரியானா சட்டப்பேரவைத் தேர்தலை பெரிதும் எதிர்பார்த்து, தேர்தல் பிரச்சார நேரத்தில், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கட்சி மேடையிலேயே கட்சி தாவல் சம்பவங்களும் அரியானா மாநில பிரச்சார நேரத்தில் அரங்கேறின. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அசோக் தன்வர், காங்கிரசில் பகிரங்கமாக இணைந்தார். இதுவும் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது.
கூடுதலாக, 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அரியானாவில் மோடி தலைமையில் முறையே 10, 10 எண்ணிக்கையில் பேரணிகள் நடத்தப்பட்டன. ஆனால், 2024 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெறும் 4 பேரணிகளே அரங்கேறின.
மேலும், அரியானா பிரச்சாரத்தில் பா.ஜ.க வைத்த பதாகைகள் எதிலும், மோடியின் படம் இடம்பெறவில்லை. இந்நடவடிக்கைகள், மக்களின் எதிர்ப்புகளுக்கு எதிரொலியாய் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதும், மாநில பா.ஜ.க அரசின் மீதும் அரியானா மக்கள் கொண்டிருந்த அதிகபட்ச அதிருப்தியே, 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சிக்கு தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னான கணிப்புகளின் வழி கிடைத்திருக்கிற முடிவு என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!