Politics
இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வெளியான கணிப்புகள்! : அக்டோபர் 8-ல் அரியானா, ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவு!
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களான அரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேர்தல்களின் வாக்குப்பதிவு நிறைவுற்றுள்ளது.
அரியானாவில், 10 ஆண்டுகால பா.ஜ.க அரசின் வஞ்சிப்புக்கு பின், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் என்ற முறையிலும்; ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தகுதி, மக்களாட்சி உரிமை பறிப்புக்கு பின், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் என்கிற முறையிலும் இத்தேர்தல்கள் கூடுதல் அரசியல் கண்ணோட்டத்தைப் பெற்றன.
அரியானாவில் காங்கிரஸ் தனித்து பெரும்பான்மை இடங்களில் போட்டியிட்டு தேர்தலை எதிர்கொண்டது. ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி போட்டியிட்டது.
எதிர்முனையில் பலவீனமான நிலையில் பா.ஜ.க பல்வேறு அடிகளைத் தாங்கிக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டது. அதன் விளைவு, தற்போது தேர்தலுக்கு பின்னான, கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது.
90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் 50 - 58 இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் இருக்கிறது என்றும், 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு - காஷ்மீரில் சுமார் 50 இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இருக்கின்றது என்றும் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இக்கணிப்புகள், பா.ஜ.க.வின் ஆதிக்க அரசியல் நடைமுறைக்கு பலத்த அடியாக மாறியுள்ளது. இந்தியா கூட்டணியின் மதநல்லிணக்க கருத்தியலும், சமூக நீதி கருத்தியலுமே, வெற்றிக்கான வித்து என்று கருத்துகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Also Read
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!