Politics
எழும் விமர்சனங்கள்... தமிழிசை, ராமதாஸ், எச்.ராஜா ஆகியோருக்கு அதிரடி பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி!
சென்னை திருவொற்றியூரில் மறைந்த மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் கழக மீனவர் அணி துணை தலைவர் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ-வின் தந்தை பரசுராமனின் 32-வது நினைவு தினத்தையொட்டி ஆயிரம் பேருக்கு மதிய உணவு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் கழக மீனவர் அணி துணைத் தலைவர் திருவொற்றியூர் கே பி சங்கர் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று தையல் இயந்திரங்கள் அரிசி உணவு உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வாரிசு அரசியலை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது. அவரும் வாரிசு அரசியலில்தான் வந்தவர். வாரிசு அரசியல்தான் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்திய அரசியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பீகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாரிசுகளாக இருப்பவர்கள்தான் தலைவராக ஆகின்றனர்; இல்லாதவர்கள்தான் அதைப் பற்றி பேசுகிறார்கள். இதில் அர்த்தமில்லை.
திமுகவை பற்றி விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு திமுகவின் சரித்திரம் உள்ளிட்ட ஒன்றுமே தெரியாது. உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டார் என்று சொல்வார். முன்னாள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி, பாஜகவிற்கு மூன்று சக்கரமாக இருந்தவருக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்து பாஜக தலைவர் ஆக்கிவிட்டார்கள். இவர் எங்கிருந்து பேசுகிறார் என்று தெரியவில்லை.
பாஜகவில் எத்தனை பேர் வாரிசுதாரர் பதவியில் இருக்கிறார்கள்? என்று பல பட்டியல் போட்டு காண்பித்துள்ளோம். 50 வருடமாக இதையே கூறிக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு அரசியல் என்று கூறிச் சென்றவர்கள் எல்லாம், எங்களோடு வந்துவிட்டார்கள். வாரிசு அரசியல் சட்டரீதியாக இந்திய அரசியலில் அங்கீகரிக்கப்பட்டது. அதனால்தான் இந்தியா ஒழுங்காக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் வாரிசு அரசியல் தொடர்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், மோடியை பார்த்து கேள்வி கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 4 வன்னியர்கள் அமைச்சராக இருக்கின்றனர். எந்த ஆட்சியிலும் இதுபோன்று கொடுத்தது கிடையாது. அது மட்டுமில்லாமல் வன்னியர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் போல இதுவரை யாரும் செய்தது கிடையாது.
வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் திமுகதான் 20% சதவீதம் பட்டியல் போட்டு காட்டியுள்ளோம். இதுவரை எந்த ஆட்சியிலும் வன்னியர்கள் நான்கு பேர் அமைச்சராக இல்லை. இதே போன்று ஒன்றிய பாஜக அரசையும் யாராவது கேட்டு வாங்கலாம். அவர் மகன் (அன்புமணி ராமதாஸ்) எம்.பி-யாக உள்ளார், அவர் கேட்டு வாங்கினால் நாங்கள் சந்தோஷப்படுவோம்.
செந்தில் பாலாஜி வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒன்றிய பாஜக திட்டமிட்டு பழிவாங்குவதற்காக மேல்முறையீடு செய்தது. எவ்வளவு தொல்லைகள் கொடுத்தபோதும் செந்தில் பாலாஜி உறுதியாக இருந்தார். மகாராஷ்டிராவில் சரத் பவாருடைய தம்பி போன்று பழிவாங்கலாம் என்று பார்த்தார்கள். ஆனால் உறுதியாக இருப்பதினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. “ சீச்சீ... இந்த பழம் புளிக்கும்..” என்று நீதிமன்றத்தில் விட்டு விட்டார்கள்.
எச்.ராஜாவுக்கு வாரிசு அரசியலை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்று வராத நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் பதவி கொடுக்கும் பொழுது, செந்தில் பாலாஜி அதே பதவி கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை.” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!