Politics

”மோடி, நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்தால் நானும் பதவி விலகத் தயார்” : முதலமைச்சர் சித்தராமையா அதிரடி!

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. தற்போது முதலமைச்சர் சித்தராமையா மீது ஊழல் குற்றச்சாட்டை பா.ஜ.க முன்வைத்து வருகிறது.

'மூடா' வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை எதுவும் இல்லை என கர்நாடக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அவரை சிக்கவைத்து சிறைக்கு அனுப்ப பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இப்படித்தான் புனையப்பட்ட ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோரை அமலாக்கத்துறையை கொண்டு கைது செய்தது. தற்போது கர்நாடக முதலமைச்சர் மீது பா.ஜ.க குறிவைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சித்தராமையா மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிக்பெரிய ஊழல் செய்துள்ள மோடி தனது பதவியை ராஜினாமா செய்தால் நானும் பதவி விலக தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய சித்தராமையா,” தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் வசூலித்த விவகாரத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு வழக்கில் ஒன்றிய அமைச்சர் குமாராசாமி ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்தால் நானும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கூறியுள்ளார்.

Also Read: தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திர நிதி : நிர்மலா சீதாராமன் மீது FIR பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!