Politics

“பாஜக கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்”- மராட்டா இடஒதுக்கீடு போராட்ட தலைவர் மனோஜ் ஜராங்கே எச்ச்ரிக்கை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாரத்தா சமூகத்தினர் பின் தங்கிய வகுப்பினராக 2018ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் இதுநாள் வரை மாரத்தா மக்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாமலேயே உள்ளது. இதனால் இவர்கள் தொடர்ந்து தங்களது உரிமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தி வருகிறனர். அதிலும் மராத்தா சமூகத் தலைவர்களில் ஒருவரான மனோஜ் ஜராங்கே பலமுறை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

எனினும் அரசு சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்ட காரணத்தால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். இதனிடையே மனோஜ் ஜராங்கே கடந்த 17-ம் தேதி 6வது முறையாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய அவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக மனோஜ் ஜராங்கேயின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்த நிலையில் உக்காரக்கூட முடியாத அளவு அவர் உடல்நிலை சென்றது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அவரை சென்று சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் பேசிய மனோஜ் ஜராங்கே, "இட ஒதுக்கீடு போராட்டத்தை பா.ஜ.க. சாதாரணமாக எடுத்துக்கொண்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனது ஆதரவாளர்களின் தொடர்ந்து கோரிக்கை வித்ததால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

Also Read: கிரீம் பன் விவகாரம் : "GST திட்டமிடுதலில் உள்ள பல விளைவுகளில் இது ஒரு சின்ன உதாரணம்தான்" - அமைச்சர் PTR !