Politics

“அதானி காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வேன்” -இலங்கை அதிபர் வேட்பாளர் அறிவிப்பு !

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம், ரஷ்யா -உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி ஜெப் பிசோஸ், ஏலான் மஸ்க், மார்க் சுக்கர்பெர்க் போன்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 60 பில்லியன் டாலர் அளவு கடுமையாக சரிந்துள்ளது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதர பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு சரிந்துள்ளது. ஆனால் இந்த பாதிப்பு ஏதும் இந்திய பணக்காரரான அதானியை பாதிக்காமல் இருந்ததோடு, அவரின் சொத்துமதிப்பும் கடுமையாக அதிகரித்து வந்தது.

இதற்கு முக்கிய காரணமாக பிரதமர் மோடியுடன் அதானிக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பு காரணமாக கூறப்படுகிறது. மோடி செல்லும் வெளிநாட்டு பயணம் எல்லாம் அதானியின் வியாபார நலனுக்காகவே என்ற விமர்சனமும் எழுந்தது. ஏற்கனவே இலங்கையின் மின்திட்டங்களை அதானிக்கு கொடுக்க இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இலங்கை அதிபர் தேர்தலிலும் இந்த விவகாரம் கவனம் ஈர்த்துள்ளது. தேசிய மக்கள் சக்தி வேட்பாளரான போட்டியிடும் அனுரா திசநாயகே தான் இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதானி காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரா திசநாயகே ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நடைபெறும் நிலையில், இந்த போட்டியில் அனுரா திசநாயகே முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சுதந்திரத்துக்கு முன்னரே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை எதிர்த்த தமிழ்நாடு : முரசொலி தலையங்கம் !