Politics
குஜராத்தில் பிறந்த புதிய கடவுள்? : மோடி பக்தர்களாக மாறிய பா.ஜ.க நிர்வாகிகள்!
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் பதவி வகித்து வரும் மோடியின் மீது, கடவுள் சாயம் பூசப்படுவது தற்போது வழக்கமான செயலாகிவிட்டது.
அதனை தொடங்கி வைத்தவரும் மோடியாகவே இருக்கிறார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நான் மற்றவர்களை போல இயல்பான பிறப்புடையவன் அல்ல, அது என் தாய் மறைவிற்கு பிறகு தான் நான் உணர்ந்தேன். என் செயல்கள் அனைத்தும், கடவுளின் உந்துதலால் நடக்கப்படுபவை” என மோடியே கூறியது, அவரது பின்பற்றாளர்களை மாய வசப்படுத்தும் விதமாகவும், பின்பற்றாளர்கள் அல்லாதோரை எரிச்சலூட்டும் விதமாகவும் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, பல பா.ஜ.க நிர்வாகிகள், மோடியை இந்து மத கடவுள்களுக்கு நிகராகவும், சில சமயங்களில் இந்து மத கடவுள்களுக்கும் மேலாகவும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
இது, ஒட்டு மொத்த இந்து மதத்தினரின் கடவுள் நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் அமைந்து வருவதாக, இந்து சமூகத்தினர் விமர்சித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களே, மோடியுடன் சண்டையிட்டு வருகின்றனர். கடவுள் தொடர்புடையவர் என்ற அடையாளத்தால், ஆர்.எஸ்.எஸ்.யினர் மக்களை வஞ்சிக்கும் காலத்திலேயே, நான் தான் கடவுள் என்ற எண்ணம், நாட்டில் வலுப்பது, முற்றிலும் ஆபத்தானது என முற்போக்கு சிந்தனையாளர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இச்சூழலில், மோடியின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17), Modern இந்தியாவின் விஷ்வகர்தா என மோடியின் படத்தை, இந்து கடவுள் போல சித்தரித்து, பா.ஜ.க நிர்வாகிகள் வழிபட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து, சிவசேனா (தாக்கரே) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், பிரியங்கா சதுர்வேதி, “மோடியை பாராட்டுவதற்காக பிற கடவுள்களை அவமதிப்பதுதான் அடுத்த பக்தி நிலையா ? தான் உயிரியல் ரீதியாக பிறந்தவர் அல்ல என்று மோடியே நம்பும்போது பா.ஜ.க-வினரிடம் நல்லறிவை எதிர்பார்க்க முடியுமா? இது இந்துக்களின் மனதை புண்படுத்துவது ஆகாதா?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!