Politics

“உள்துறை அலுவலகத்தில் அனைத்து கோப்புகளும் இந்தியில் மாற்றம்”- அமித்ஷாவின் கருத்துக்கு பெருகும் எதிர்ப்பு!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் ஒன்றிய அரசு அதிகாரிகள் இந்தியில் பேசவேண்டும் என்றும், இந்தி பேசாதவர்கள் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் இந்தி திவாஸ் நிகழ்வு நடத்தப்பட்டது. அதனைத் முன்னிட்டு இந்தி திவாஸ் நான்காவது அகில் பாரதிய ராஜ்பாஷா சம்மேளனத்தில் உரையாற்றிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா. “எனது துறையில் உள்ள அனைத்துத் தகவல் தொடர்புகளையும் கோப்புகளையும் இந்தியில் மாற்ற எனக்கு 3 ஆண்டுகள் ஆகின. உள்துறை அலுவலகத்தில் எந்தக் கோப்புகளும் ஆங்கிலத்தில் இல்லை” என்று கூறினார்.

இந்தியாவில் அழுவல் மொழியாக ஆங்கிலம் தொடரும் நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தனது உள்துறை அலுவலகத்தில் எந்தக் கோப்புகளும் ஆங்கிலத்தில் இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இணையதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: சட்டமன்ற தேர்தல் குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிப்பு : டெல்லியின் அடுத்த முதல்வர் யார் ?