Politics
“வேண்டப்பட்டவர்களுக்கு அரசு பணி நியமனங்கள்” - புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் !
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் புறவாசல் வழியாக சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாகவும், தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து பின் அவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவதாகவும் கூறி, புதுவையைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வேண்டப்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது போட்டித் தேர்வு மூலம் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என்றும், இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மீறி புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாகவும், 52 துறைகளில் இது போல நியமனங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் தங்களுக்கு கருணை அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலை பறிக்கப்படுவதாகக் கூறி கோபி கண்ணன் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தனர் .
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சட்டவிரோத நியமனங்களை நியாயப்படுத்த ஏன் புதுச்சேரி அரசு போராடுகிறது என கேள்வி எழுப்பினார். மேலும், முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தி, தகுதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டை பின்பற்றி பணிநியமனங்கள் வழங்க வேண்டும் எனவும், வேண்டப்பட்டவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் கொடுத்து, தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? அவர்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? என கண்டனம் தெரிவித்தார்.
அதோடு அனைத்து பணி நியமனங்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு நியாயமான தேர்வை நடத்த முடியாதா என கேள்வி எழுப்பினார். பினர் சட்டவிரோதமாக பணிநியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து புதுவை அரசு உரிய பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Also Read
-
”50% நிதி பகிர்ந்தளிக்க வேண்டும்” : 16-வது நிதி ஆணையக்குழுவுக்கு தமிழ்நாடு அரசின் பரிந்துரைகள் என்ன?
-
சென்னையில் 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பில் துணை மின் நிலையங்கள்... - மின்சாரத்துறை அறிவிப்பு !
-
மகாராஷ்டிர தேர்தல் : RSS தலைமையகத்தில் Road Show நடத்திய பிரியங்கா காந்தி.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !
-
டெல்லி காற்று மாசு: “அதிகரிக்கும் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” -ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
-
”மணிப்பூர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு CPM வலியுறுத்தல்!