Politics
அன்னப்பூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் நாளை போராட்டம்
மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் அதிக அளவிலான ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது.
மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் நேற்றைய முந்தினம் (11.09.2024) கோவையில் நடைபெற்ற தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சியின்போது, அன்னப்பூர்ணா நிறுவனர் சீனிவாசன், ஜி.எஸ்.டி குறித்து கேள்வியெழுப்பி, கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து அன்னப்பூர்ணா நிறுவனர் சீனிவாசன் பேசுகையில், “இனிப்பு வகை உணவுகளுக்கு 5% ஜி.எஸ்.டி என்றால், கார வகை உணவுகளுக்கு 12 % ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. அதே பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அது 18% ஜி.எஸ்.டி ஆகிவிடுகிறது. மக்கள் பன், க்ரீமை தனி தனியாக கொண்டுவாருங்கள் என்று கேட்கிறார்கள்.
உங்கள் அருகில் உள்ள எம்.எல்.ஏ வானதி, எங்கள் உணவகத்தின் ரெகுலர் கஸ்டமர். அவர் வரும்போது எல்லாம் இனிப்பு, காரத்துக்கு தனி தனி ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்காக எங்களிடம் தினமும் சண்டை போடுகிறார். வடநாட்டில் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜி.எஸ்.டியும் நிர்ணயித்துள்ளதாக எம்.எல்.ஏ வானதியே கூறுகிறார்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை இருப்பதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. அதேபோல ஹோட்டலுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் திணறுகிறார்கள். எனவே ஜி.எஸ்.டி வரியை முறைபடுத்த வேண்டும்” என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பலவித கருத்துகளை பெற்று வருகிறது.
இந்த சூழலில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோரை தனியாக சந்தித்த அன்னப்பூர்ணா உரிமையாளர், தனது பேச்சுக்கு எழுந்து நின்று கைக்கூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தொழிலதிபர் சீனிவாசன் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து நாளை (14.09.2024) தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு :
“நாளை(14.09.2024) சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கோயம்புத்தூர் காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டல் எதிரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோயம்புத்தூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.வி.எம்.சி.மனோகரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறேன்.”
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!