Politics

5 மாதத்துக்கு பிறகு ஜாமின்- சிறையில் இருந்து வெளிவந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: CBIக்கு நீதிபதிகள் கண்டனம்!

ஒன்றிய பாஜக அரசு தங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைத்தது.

கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அவர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. அந்த வழக்கில் ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் பல கேள்விகளை எழுப்புகிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”அரவிந்த கெஜ்ரிவாலின் பிணை மனுவை மட்டுப்படுத்தவே சி.பி.ஐ அவரைக் கைது செய்துள்ளது என்பது தெரிகிறது. ஒன்றிய அரசின் கூண்டு பறவைதான் என்ற சி.பி.ஐ மீதான பார்வை மாற்றப்படவேண்டும். சி.பி.ஐ., எந்த பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.

Also Read: அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளரை அவமதித்த நிர்மலா சீதாராமன்... இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் கண்டனம்!