Politics
கேள்வி கேட்ட அன்னபூர்ணா நிறுவன உரிமையாளர் : மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலா சீதாராமன்? - பின்னணி?
கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய முந்தினம் (11.09.2024) கலந்துரையாடினார். அப்போது அங்கு வந்திருந்த தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளருமான சீனிவாசன், ஜி.எஸ்.டி. குறித்த அவலங்களை கூறினார்.
இதுகுறித்து பேசிய அவர், “இனிப்புக்கும், காரத்துக்கும் வேறு வேறு ஜிஎஸ்டி உள்ளது. பன்னுக்கு வரி இல்லை. ஆனால், அதில் க்ரீம் கலந்தால் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி ஆகிவிடுகிறது. இதனால் வரும் வாடிக்கையாளர், பன் தனியாக, ஜாம் தனியாக வேண்டும் என்று கேட்கிறார்கல். ஒரு குடும்பம் உணவு சாப்பிட்டாலே பில் போடும்போது கம்ப்யூட்டரே திணறுகிறது. இனிப்பு, கார வகை உணவுப் பண்டங்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வேண்டும்” என்று தனது பாணியில் கூறியிருந்தார்.
மேலும் ஒரே சமையலர் செய்யும் ஒவ்வொரு வகை இனிப்புக்கும் காரத்துக்கும் வெவ்வேறு ஜிஎஸ்டி விதிப்பது அதிர்ச்சி அளிப்பதாவும், உடனிருந்த கோவை எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை குறிப்பிட்டும் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதற்கு பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாரமன், “அன்னபூர்ணா சீனிவாசன் பேசியது கேட்க வேண்டுமானால், ஜனரஞ்சமாக இருக்குமே தவிர, ஜிஎஸ்டியை எதிர்ப்பவர்களுக்குத்தான் சாதமாக அமையும். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை” என்றார். இதுகுறித்து பல வித கருத்துகள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்பது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரை அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் சந்திக்கிறார். பின்னர் இருவரிடமும் ஏதோ பேசுகிறார். பின்னர் மன்னிப்பு கேட்பது எழுந்து நின்று கைகூப்பி கூறிவிட்டு தனது இருக்கையில் மீண்டும் அமர்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!