Politics
47 தொகுதிகளில் 19 தொகுதியில் மட்டுமே போட்டி : காஷ்மீரில் தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக !
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு நடந்த ஆட்சியை பாஜக கவிழ்த்த நிலையில், ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. இதனை சாதகமாக வைத்து காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் தனியே பிரிக்கப்பட்டது.
அதோடு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டமும் பறிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறாத நிலை நிலவி வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அங்கு அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஜம்மு காஷ்மீரிலுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செப்.18, 25 மற்றும் அக்.1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை இந்தியா கூட்டணி ஒரே அணியாக எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கூட்டணிக்கு ஆள் இல்லாத நிலையில், பாஜக தனித்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில், 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள ஜம்மு காஷ்மீரில் 60 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 47 தொகுதிகளில் வெறும் 19 தொகுதியில் மட்டுமே போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
தெற்கு காஷ்மீரில் 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் அங்கு 8 தொகுதிகளிலும், மத்திய காஷ்மீரில் 15 தொகுதிகள் உள்ள நிலையில் அங்கு 6 தொகுதிகளிலும், 16 தொகுதிகளை கொண்ட வடக்கு காஷ்மீரில் 5 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடவுள்ளது. இதன் மூலம் தேர்தலுக்கு முன்னரே பாஜக தனது தோல்வியை ஒப்புகொண்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!