Politics

"மசூதிக்குள் நுழைந்து அனைவரையும் வேட்டையாடுவோம்" - பாஜக MLA-வின் கருத்தால் சர்ச்சை !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிரான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கும்பலின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர்களே இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதற்கு பாஜக தலைவர்கள் பேசும் வெறுப்புவாத கருத்தே காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத குரு மஹந்த் ராம்கிரி மகாராஜ் என்பவர் கடந்த ஆண்டு இஸ்லாமியர்கள் மற்றும் முகமது நபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார். இதனிடையே அவருக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ நித்தேஷ் ரானே கலந்த கொண்டார்.

அந்த கூட்டத்தில் பேசிய அவர், "மஹந்த் ராமகிரி மகாராஜுக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். நாங்கள் மசூதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் அனைவரையும் வேட்டையாடுவோம். இதனை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்"என்று கூறினார்.

பாஜக எம்.எல்.ஏவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவரின் கட்சியான பாஜகவே அவருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதே நேரம் அவரை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: SEBI தலைவர் மாதபி புச் மீது புகார் தெரிவித்த SEBI ஊழியர்கள்... நிதியமைச்சகத்துக்கு கடிதம் !