Politics
”மணிப்பூர் செல்ல இன்னும் நேரம் கிடைக்கவில்லையா?” : மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.
மாநிலத்தை இயல்புநிலைக்கு கொண்டுவராமல் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பல முறை மணிப்பூர் மக்களை நேரில் சந்தித்துள்ளார்.
ஆனால் ஒரு முறைகூட இந்நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி மணிப்பூர் பக்கமே எட்டிக்கூட பார்க்காமல் இருந்து வருகிறார். ஆனால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது கூட புரூனே புறப்பட்டு சென்றுள்ளார் மோடி.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி எப்போது மணிப்பூர் மக்களை சந்திக்க செல்வார்? என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"புரூனே செல்வதை வரலாற்று சிறப்புமிக்க பயணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமைதித் தூதுவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உலகம் முழுவதும் செல்லும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு எப்போது பயணத்தை மேற்கொள்வார்?. மணிப்பூரில் வன்முறை அரங்கேறி இன்றுடன் 16 மாதங்கள் ஆகிறது. இம்மக்களை சந்திக்கதான் பிரதமர் மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!