Politics
இஸ்லாமிய முதியவருக்கு கிடைத்த நீதி! : இந்தியா கூட்டணியின் அழுத்ததிற்கு பிறகு திரும்பப் பெறப்பட்ட பிணை!
மகாராஷ்டிர மாநிலத்தில் இஸ்லாமிய முதியவருக்கு நீதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தானே தொடர்வண்டி நிலைய காவல்துறையினரிடம், இந்தியா கூட்டணியில் பங்கு கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) சட்டப்பேரவை உறுப்பினர் ஜித்தேந்திர அவ்ஹாத் கொடுத்த அழுத்தத்தில் நீதி கிடைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆகஸ்ட் 28ஆம் நாள், ஜல்கவுன் மாவட்டத்திலிருந்து கல்யாண் என்கிற பகுதிக்கு, தனது மகளை காண சென்ற ஹஜி அஷ்ரஃப் என்கிற முதியவரை, மாட்டிறைச்சி எடுத்துச்சென்றார் என 7 குண்டர்கள் கடுமையாக தாக்கினர்.
தாக்கியதோடு மட்டுமல்லாமல், அதனை காணொளியாகவும் படம் பிடித்தனர். அக்காணொளி இணையத்தில் வெகுவாக பரவி, தேசிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்தது.
இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான முதியவர் அஷ்ரஃப் காவல்துறையினரிடம் ஆகஸ்ட் 31 அன்று, இறைச்சி எடுத்துச்சென்றதற்காக தாக்கிய 7 பேர் மீது புகார் அளித்தார்.
அப்போது, தன்னை அவர்கள் கொல்லத் திட்டமிட்டதாகவும், கல்யாண் பகுதியில் இறங்க அனுமதிக்கவில்லை என்றும், தன்னிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
ஆனால், புகாரை ஏற்றுக்கொண்ட மகாராஷ்டிர காவல்துறை, அக்குண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய ஒப்புக்கொள்ளாமல், பிணை கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செயத்தது. அதற்கேற்ப வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் குண்டர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஹஜி அஷ்ரஃப்பிடம் இருந்து கொள்ளை அடித்து, அவரை கொலை செய்ய முயன்ற நிலையிலும், ஏன்? குண்டர்கள் மீது காவல்துறை கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என இந்தியா கூட்டணியில் பங்கு கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) சட்டப்பேரவை உறுப்பினர் ஜித்தேந்திர அவ்ஹாத் அழுத்தம் கொடுத்தார்.
அதனால், காவல்துறை வேறு வழியின்றி குற்றப்பிரிவுகளை வலுப்படுத்த, மகாராஷ்டிர நீதிமன்றமும், வழங்கிய பிணையை திரும்பப்பெற்றது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!