Politics
"உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன்"- விவசாயிகளின் போராட்டத்துக்கு வினேஷ் போகத் நேரில் சென்று ஆதரவு !
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியது பாஜக அரசு. எனினும் விவசாயிகள் தொடர்ந்து ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஒலிம்பிக் நாயகி வினேஷ் போகத் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன். உரிமைக்காக குரல்கொடுக்கும் உங்களை பார்க்கும்போது எங்களுக்கு கூடுதல் வலிமை கிடைக்கிறது.
நம் உரிமைக்காக நாம் நிற்க வேண்டும், நமக்காக வேறு யாரும் வரப்போவதில்லை. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன். 200 நாள்களாகியும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்பது வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!