Politics
வெளிப்படையாக இலஞ்சம் தரும் யோகி ஆதித்யநாத் அரசு! : உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறும் மற்றொரு முறைகேடு!
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி செய்து வரும் கடந்த ஏழு ஆண்டுகளில் எண்ணற்ற முறைகேடுகளும், மோசடிகளும், குற்றங்களும் அரங்கேறியுள்ளன.
அதில் உழவர்கள் போராட்டத்தின் போது பேரணியாக சென்ற 8 உழவர்களை வாகனம் ஏற்றி கொன்ற நிகழ்வு, மதப் பிரிவினையை வளர்க்கும் வகையில் ராமர் கோவில் திறப்பின் போது மற்ற மத ஆலையங்களில் ராமர் வாழ்க என முழக்கமிட செய்தது, மக்களவை தேர்தலின் போது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்களிக்க விடாமல் தடுத்தது என்பன முக்கிய முறைகேடுகளாக விளங்குகின்றன.
இதனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க, பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் படுதோல்வியடைந்தது. இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெற்றது.
இதனிடையே பா.ஜ.க கூட்டணிக்குள் குழப்பம் வேறு. எனவே, ஆதாரவாளர்களை இழந்து வரும் யோகி தலைமையிலான பா.ஜ.க, வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர வெளிப்படையாக இலஞ்சம் தர முன்வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் உத்தரப் பிரதேச பா.ஜ.க.விற்கு ஆதரவாக பதிவிடுவோருக்கு, மாதம் ரூ. 8 இலட்சம் வரை, அரசு வழங்கும் என யோகி ஆதித்யநாத் அறிவித்ததே, அந்த வெளிப்படையான இலஞ்சம்.
இது குறித்து, பிரபல Youtuber துருவ் ரதே, “உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசிற்கு ஆதரவாக இணையத்தில் தொடர்ந்து பதிவிடுவோருக்கு, மாதம் ரூ. 8 இலட்சம் வரை வழங்கப்படும் என யோகி அதித்யநாத் அரசு குறிப்பிட்டுள்ளது, சட்டபூர்வமாக்கப்பட்ட இலஞ்சம். வரி செலுத்துவோர்களிடம் இருந்து பெறப்படும் பணம் அது” என தனது கண்டனத்தை X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!