Politics
“புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், கல்விக்கான நிதியை தர மறுக்கிறது பா.ஜ.க!” : அப்பாவு கண்டனம்!
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 166-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கோடு சர்வ சிக்ஷ அபியான் திட்டம் கொண்டுவரப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் ஆரம்ப நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்காக அத்திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஒன்றிய அரசு அத்திட்டத்தை சமக்கர சிக்ஷா அபியான் என பெயர் மாற்றி, 2022- ம் ஆண்டு முதல் அந்த நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இங்கு அதிக மருத்துவப் பட்டதாரிகள் இருக்கிறார்கள் அதற்கு இடையூறு செய்வது போல் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது என புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால் நிதியை வழங்க மறுக்கிறார்கள்.
புதிய கல்வி கொள்கையில் 2035க்குள் நாட்டில் 50% பேரை பட்டதாரிகளாக ஆக்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால், ஏற்கனவே தமிழ்நாட்டில் 51% பேர் பட்டதாரி ஆகிவிட்டார்கள். அதேபோல் மக்கள் தொகை அடிப்படையில் கல்வி வழங்க இத்திட்டம் வழி வகுக்கிறது.
தற்போது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக 78 மருத்துவ கல்லூரி உள்ளன அதில் 11,500 மருத்துவ மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், புதிய கல்வி கொள்கை வந்தால் 7500 பேர் தான் படிக்க முடியும். அதேபோல், கலை கல்லூரிக்கும் நுழைவு தேர்வு கொண்டு வருவோம் என சொல்கிறார்கள் அது போன்ற நிலை வந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டி இருக்கும்.
மேலும், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களின் தந்தை தொழிலுக்கு செல்லும்படி கூறுகிறார்கள். இது முன்னாள் முதல்வர் ராஜாஜி கொண்டு வந்தார் குலக்கல்வி கொள்கையை ஊக்குவிப்பது போல் இருக்கிறது.
ஆவணங்கள் கொடுக்காததால் தான் எய்ம்ஸ் மெட்ரோ திட்டம் உள்பட ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு நிதி வழங்காமல் இருப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியது உண்மையானால் அது கடும் கண்டனத்திற்குரியது ஒரு நிர்வாக கட்டமைப்போடு செயல்படும் அரசின் தலைமைச் செயலாளர் இது போன்ற நிதிகளைப் பெற ஆவணங்களை கொடுக்காமல் எப்படி இருப்பார்?” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!