Politics

அதானி - செபி உறவு : “ஒன்றிய அரசு மறைக்க பார்த்தால்...” - பத்திரிகையாளர் இந்து என்.ராம் எச்சரிக்கை !

சென்னை இராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இந்திய சமூக விஞ்ஞானிக் கழகம் சார்பில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான அதானி குழுமம் - செபிக்கும் இடையேயான உறவிற்கு ஒரு சுயேட்சியான விசாரணை வேண்டும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக இந்து குழுமத்தின் முன்னாள் தலைவர் இந்து.என்.ராம், பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அப்போது இந்து குழும முன்னாள் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான இந்து.என்.ராம் பேசியதாவது, “உச்சநீதிமன்றத்தில் ஹிண்டன்பர்க் விவகாரத்தை தவறான விதத்தில் கையாளப்பட்டுள்ளது. இதை சரியான முறையில் கையாண்டு இருந்தால், பெரும் ஊழல் வெளிவந்து இருக்கும். தேர்தல் பத்திரம் வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கவில்லை என்றாலும், சரியான தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதற்கு நிகரான இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தோற்று விட்டது.

செபி நிலைமை என்னவென்று நாம் அனைவருக்கும் நன்றாக தெரிகிறது. நீதிமன்றத்திற்கு உச்சபட்ச அதிகாரம் இருந்தும் இந்த விவாகரத்தில் தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதிலளித்த செபி, ‘இதை ஊழல் என்று சொல்லக்கூடாது’ என்பதை மட்டுமே தெரிவித்திருந்ததே தவிர, ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை கேள்வி கேட்கவில்லை.

செபி 23 குழுவிடம் விசாரணை செய்தது. ஆனால் இன்னும் 1 குழுவிடம் விசாரணை பாக்கி உள்ளது எனக் கூறும் செபி, இந்த விவாகரத்தை முழுவதுமாக முடி மறைத்து, தனக்கு பாதிக்க ஏற்பட வகையை அமைத்துவிட்டது. ஹர்ஷா மேத்தா ஊழல் பிறகு தான், செபி அரசின் கட்டுபாட்டில் வந்தது. ஒன்றிய அரசும், நிதித்துறை அமைச்சரும் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை.

செபி தலைவர் மாதபி புச் கணவர் பெயரில் எப்படி பங்குகள் வாங்கப்பட்டது, செபியில் பொறுப்புகளில் இருப்பவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானால், அவர்கள் மீது நடவடக்கை எடுக்க வேண்டும், ஆனால் ஒன்றிய அரசு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாதபி புச் தவறான நடவடிக்கை மறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக இந்த விவாகரத்தில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்ப பல செயல்களை செய்து வருகிறது. மாதபி புச் பொறுப்பினை உடனடியாக பறிக்க வேண்டும். பெரும் முதலாளிகளும், இந்துத்துவம் இணைந்துதான் மோடி வளர்ச்சி அமைத்து உள்ளனர்.

ஒன்றிய அரசாங்கம் ஓர் விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து மூடி மறைக்க பார்த்தால், இந்த விவகாரம் மேலும் பெரிதாக மாறக்கூடும். செபி தலைவராக மாதபி தொடர்ந்தால், பெரும் பாதிப்பை ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு ஏற்படுத்தும். அமெரிக்கா ஹார்ட்வாட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உண்மை தன்மையை அறியாமல் வெளிப்படுத்திய கருத்து மன அதிருப்தியை ஏற்படுத்துகிறது.” என்றார்.

Also Read: நாட்டுடமை ஆக்கப்பட்ட கலைஞரின் படைப்புகள் : "புகழால் தமிழ் காப்பார் கலைஞர்"- முரசொலி புகழாரம் !