Politics
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் கொண்டுவரப்படுமா?- கனிமொழி MP கேள்வி!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் அருகே வைகைக்கும் தேவநேய பாவாணர் திடலில், வாகை மக்கள் இயக்கம் சார்பாக பெருந்தமிழர்கள் பெருவிழா 2024 நேற்று (17/08/2024) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி. நிகழ்ச்சியில் உரையாற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி, "தேவநேயப் பாவாணரின் தமிழ் அறிவை உணர்ந்து கொண்டு பாவணருக்கு மரியாதை அளித்த தலைவர் கலைஞர். நாம் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை, அனைவரும் சமம் என்பதே திராவிட இயக்கமான இந்த மண்ணின் உணர்வு.
திராவிட இயக்கம் சாதியே இல்லை என்கிறது, ஆனால் ஜாதி மத பேதங்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து பிரிவினையை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்தக்கூடிய இயக்கம்தான் பாரதிய ஜனதா கட்சி.
அனைத்து ஜாதிகளும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கொண்டுவர பாஜக தயாரா? கடவுள் நம்பிக்கை இருக்கும் ஹிந்துக்களை கோவில் கருவறைக்கு அனுமதிக்க பாஜக தயாரா? அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை பாஜகவிடம் உள்ளதா?
தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிவாரண நிதியை தராமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. சாமானிய மக்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்காத வகையில் ஆட்சி செய்து வருகிறார். இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்து வருவகிறது. ஆனால் அது அதானி மற்றும் அம்பானி ஆகிய இரண்டு பேருக்கும்தான்"என்று கூறினார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!