Politics
“தமிழ்நாட்டிற்கு சென்று கேட்கமுடியுமா?” - இந்தியில் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு சுருக் கேள்வி!
MUDA எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தனதுமனைவிக்கு சொந்தமான 3.14 ஏக்கர் நிலத்தை MUDA தான் ஆக்கிரமித்து இருந்தது என்றும், அதற்கு இழப்பீடாகவே 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன என்றும் விளக்கம் அளித்தார்.
எனினும் இந்த விவகாரத்தை பாஜகவினர் பூதாகரமாக்க முயன்று வருகின்றனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் என பல விஷயங்களை செய்து வருகிறது பாஜக. மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் பாஜக தலைவர்கள் முறையிட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் நேற்று (ஆக.17) அனுமதியளித்துள்ளார்.
ஆளுநரின் இந்த உடனடி அனுமதியின் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாகவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஆளுநருக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று (ஆக.17) பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒன்றிய பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் MUDA விவகாரத்தில் ஆளுநர் அவசரமாக செய்த நடவடிக்கையின் பின்னணி என்னவென்று தனக்கு தெரியாது என்று கூறிய அவர், வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.
அந்த சமயத்தில் MUDA விவகாரம் குறித்து செய்தியாளர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார். அதற்கு கார்கே கன்னடத்தில் பதில் தெரிவிக்கவே, இந்தியில் பதில் கூறுமாறு, அந்த செய்தியாளர் கூறினார். இதற்கு மிகவும் கடுப்பான கார்கே, கன்னடத்தில் கேட்குமாறு தெரிவித்தார்.
மேலும், "கர்நாடகாவுக்கு வரும் போது சிறிதாவது கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறிய அவர், "உங்களால் தமிழ்நாட்டிற்குச் சென்று இந்தியில் கேள்வி கேட்க முடியுமா? கர்நாடகாவுக்கு வரும் போது கொஞ்சமாவது கன்னட மொழியை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். தற்போது மல்லிகார்ஜுன கார்கே பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!