Politics

"பல்வேறு மாநிலங்களில் நீட் எதிர்ப்பு உருவாகியுள்ளதே ஒரு மிகப்பெரிய வெற்றிதான்" - ஆளூர் ஷா நவாஸ் !

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் "நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்" மதிமுக மாணவர் அணியின் சார்பில் நடைபெற்றது. இதில் மதிமுக பொருளாளர் மு.செந்திலபன், திமுக மாணவர் அணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், திராவிட கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி உள்ளிட்டோர் பங்கேற்று மேடையில் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், "தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய மாநிலம். வெறுப்பின் அடிப்படையிலோ வெறுமனே ஒரு கோபத்தின் அடிப்படையிலோ அல்லது எதையாவது எதிர்க்க வேண்டும் என்கிற எதிர்ப்புணர்வின் அடிப்படையிலோ ஒன்றை நாம் தீர்மானிப்பது இல்லை. எதை நாம் தீர்மானித்தாலும் எந்த முடிவை நாம் எடுத்தாலும் அந்த முடிவு அறிவு பூர்வமாக இருக்கும். அந்த முடிவுக்கு பின்னால் 1000 நியாயங்கள் இருக்கும். அந்த முடிவுக்கு பின்னால் சமூக நீதி அடங்கி இருக்கும் என்பதனால் தான் நாம் நீட்டை எதிர்க்கிறோம்.

நீட் அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்டு விட்டது உங்களுக்கு என்ன கேடு என்று கேட்டார்கள். எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட பிறகு நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் நாம் அப்போதே சொன்னோம் காலம் உங்களுக்கு உணர்த்தும் என்று, காலம் இப்போது உணர்த்த தொடங்கி இருக்கிறது. இப்போது அவர்கள் நீட்டு தேர்வு முறைகேடு என்று சொல்லி இந்த ஆண்டு மட்டும் வேண்டாம் அல்லது மீண்டும் தேர்வை நடத்து என்று ஏதோ ஒரு வடிவத்தில் இன்றைக்கு பல்வேறு மாநிலங்களில் நீட் எதிர்ப்பு என்பது உறுப்பெற்றிருக்கிறது இதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி.

திமுக, அதிமுக, விசிக, பாமக என தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் சித்தாந்தங்கள் கோட்பாடு வேறு ஆக இருக்கலாம் அனைவருடைய லட்சமும் நீட் விளக்கு வேண்டும் என்பதுதான். நிட்சயம் நீட் எதிர்ப்பில் வெற்றி பெருவோம்"என்றார்.

தொடர்ந்து திமுக மாணவர் அணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் பேசும்போது, "நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை முதன் முதலாக முன்னெடுத்தது திமுக மாணவர் அணி தான்.அப்போது எதிர்கட்சியாக இருந்த போதே பல கொள்கையுடைய கட்சிகள் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பினோம். மாணவர்களின் கல்வி கனவோடு ,மாநில உரிமையை காக்கவும் போராட்டம் முன்னெக்கப்பட்டது.

போராடி போராடி தான் நமக்கு வேண்டிய உரிமைகள் பெற வேண்டியுள்ளது. தமிழ்நாட்டு முதல்வர் ஒவ்வொரு திட்டங்களில் முன்னோடி மாநிலமாக திகழும் அளவிற்கு மக்கள் நல திட்டங்களை உருவிக்கி வருகிறார். புதுமை பெண், நான் முதல்வன், காலை உணவு , தமிழ் புதல்வன், என சொல்லிக் கொண்டே போகலாம். நீட் விலக்கும் கூடிய விரைவில் தமிழ்நாட்டிற்கு பெற்று தருவோம்"என்றார்.

Also Read: "தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !