Politics

SEBI - Hindenburg விவகாரம் : “அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு” : காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, 3-வது முறையாக தனது ஆட்சியை தொடர்ந்து வருகிறது. அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே தனது ஆட்சியின் இலக்காக கொண்டு கடந்த 10 ஆண்டுகளும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே உழைத்து வந்தது ஒன்றிய பாஜக அரசு.

இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தாலும் தனது கார்ப்பரேட் நண்பரான அதானிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொண்ட பங்கு பிரதமர் மோடிக்கு உண்டு. ஒன்றிய பாஜக அரசின் பெரிய உறுதுணை இருப்பதாலே, அதானியின் பங்குகளும் உச்சத்தில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் உள்ளதை வெளிப்படுத்தியது.

அதானி குழும நிறுவனங்கள் போலியான முறையில் ,மொரீஷியஸ் நிறுவனங்களின் பெயரில் தங்கள் பங்குகளை தாங்களே வாங்கி, அதன் மூலம் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பை உயர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரும் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டி 88 கேள்விகளை முன்வைத்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இதுகுறித்து விவாதமும் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தது.

ஆனால் இதனை திசைத்திருப்புவதற்காகவே, ராகுல் காந்தியை சஸ்பெண்ட் செய்தது பாஜக அரசு. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை SEBI (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் SEBI விசாரணையை முறையாக நடத்தாமல் மந்தமாக செயல்பட்டது.

இதனால் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், SEBI விசாரணையே போதுமானது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரம் சுமார் 18 மாத காலமாக அமைதியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

அதாவது கடந்த ஆக.11-ம் தேதி அதானி குழுமம் முறைகேட்டிற்கு பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் SEBI தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோருக்கும் பங்குகள் இருப்பதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மேலும் இதனால்தான் இந்த விசாரணையை SEBI மிகவும் மெதுவாக விசாரிபபதாகவும், SEBI தலைவர் பதவியை தவறாக பயன்படுத்தி மாதபி ஆதாயம் தேடுவதாகவும், எனவே SEBI விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும் Hindenburg தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதற்கான ஆதாரங்களையும் தனது தள்த்தில் வெளியிட்டுள்ள Hindenburg, மேலும் பல குற்றச்சாட்டுகளை அதில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், அதானியின் பங்கு தற்போது சரிந்து வருகிறது. இதுகுறித்து பலரும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதானி முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த முறைகேடு புகாரில் சிக்கியுள்ள செபி தலைவர் மாதபி புச், ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும் அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, அதானி - செபி முறைகேட்டை கண்டித்து வரும் ஆக. 22-ம் தேதி நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Also Read: 65 நாட்களில் 17 ரயில் விபத்துகள்! : தவறுகளை தட்டிக்கழிக்கிறதா பா.ஜ.க?