Politics
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : அவதூறு பரப்பிய பாமக தலைவர் அன்புமணி... அம்பலப்படுத்திய TN Fact check !
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்றுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம் உட்பட 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட மலர்கொடு சென்னை திருவல்லிக்கேணி மேற்குப் பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் த.மா.கா.வில் மாநில மாணவரணி துணைத் தலைவராக உள்ளார். மேலும் இதில் பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அஞ்சலையை தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.
மேலும், பல்வேறு முக்கிய அரசியல் புள்ளிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை கோரி அனுமதியில்லாமல் பேரணி நடத்தியதாக ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை கோரி அனுமதியில்லாமல் பேரணி நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை உண்மை என நம்பி ஏராளமானோர் இது பற்றி கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொய்யான தகவலை பரப்பியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள பதிவில் , " ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை கோரி அனுமதியில்லாமல் பேரணி நடத்தியதாக அவரின் 2 வயது மகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக' அன்புமணி ராமதாஸ் பதிவிட்டு இருக்கிறார். இது முற்றிலும் பொய்யான தகவல். 'பேரணி தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப் பதிவு ஏதும் செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது" என்று கூறியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!