Politics
முன்னதாக முடிக்கப்படும் நாடாளுமன்ற அவைகள் : ஒன்றியத்தில் பொறுப்பேற்றிருப்பது யாருக்காக?
10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளும், ஆதிக்க அரசியல் செயல்பாடுகளும், உச்சம் தொடும் அளவில் விளங்கி வந்தது. அதனால், மக்கள் அடைந்த துயரத்தின், வலியின் வெளிப்பாடாக 18ஆவது மக்களவையின் முடிவு அமைந்தது.
2014, 2019 தேர்தல்களில் எதிர்க்கட்சியின் வலு குன்றியதால் பா.ஜ.க.விற்கு இருந்து வந்த தலைக்கனம், 2024இல் தரையைத் தொட்டது. இதனால், ஒன்றிய பா.ஜ.க.வின் குரலும் சற்று குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் நிகழும் பல்வேறு சிக்கல்கள் குறித்த விவாதங்களை முன்னெடுக்க, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பெரும் முழக்கங்களை முன்வைத்து வருகின்றனர்.
நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், விவசாயிகள் வஞ்சிப்பு, முதலாளித்துவ கொள்கை, சிறுபான்மையினர் மத நம்பிக்கையை சிதைக்கும் “வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா” போன்ற மசோதாக்கள், விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நாட்டின் பல்வேறு துறைகளில் நிகழும் பல்வேறு இடர்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகளையும், வாதங்களையும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முன்வைத்து வருகின்றனர்.
எனினும், அதனை ஒரு பொருட்டாக கூட எண்ணாத ஒன்றிய பா.ஜ.க, மக்களவையில் எதிர்க்கட்சினரை பேச அனுமதிக்காமை, விவாதங்களை எதிர்கொள்ளாமை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும் போது ஒலி வாங்கியை தடைப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
இதனை எதிர்க்கட்சிகள் கண்டிக்கும் வேளையில், அதனை ஏற்றுக்கொள்ள மனது ஒத்துழைக்காமல், எதிர்க்கட்சியினரின் பேச்சை பாதியிலேயே வலுக்கட்டாயமாக நிறுத்துகின்றனர் ஒன்றிய பா.ஜ.க.வினர். இது போன்ற நடவடிக்கைகளுக்கிடையில் தான் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது போன்ற சூழலில், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டு விவாதமிட இயலாமல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முன்கூட்டியே ஒத்திவைப்பதை வழக்கமாக்கி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இதனால், ஒன்றியத்தில் மக்களின் நிகராளிகளாக பதவியேற்றிருக்கும் பா.ஜ.க.வினரை நோக்கி, மக்களின் சிக்கல்களை பேசுவதில்லை, அவர்களின் துயரங்களில் பங்கெடுப்பதில்லை, மத நல்லிணக்கத்தை விதைப்பதில்லை, அரசியலமைப்பிற்கு உட்பட்டு நடப்பதில்லை போன்ற எதிர்மறை செயல்களில் ஈடுபடுவதற்காக தான் ஆட்சியைப் பிடித்தார்களா? உள்ளிட்ட கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!