Politics
மருத்துவக் காப்பீடுக்கு GST - ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்!
பாஜக ஆட்சியமைத்ததில் இருந்தே நாட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு சட்ட மசோதாவை இயற்றி வருகிறது. மேலும் பணமதிப்பிழப்பு, GST என தொடர்ந்து சாதாரண மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அன்றாட தேவைகளுக்கு அதிக GST வரி விதிக்கப்பட்டு ஏழை, நடுத்தர மக்களுக்கு இன்னல்களை விளைவித்து கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
அந்த வகையில் மருத்துவம் சார்ந்த காப்பீடுகளுக்கும் 18% GST வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வரியை குறைக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ ப்ரையன் நேற்று நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார். இதுகுறித்து அவர் பேசுகையில், "மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். இது மக்களுக்கு, முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினருக்கு சுமையாக இருக்கும் பிரச்சினை.
சர்வதேச அளவில் மருத்துவக் காப்பீடு 7% க்கும் அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது 4% க்கும் குறைவாக உள்ளது. பொதுவாக எங்கள் (எதிர்க்கட்சிகள்) பேச்சை கேட்க மாட்டார்கள். இதே விவகாரத்தை ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். குறைந்தபட்சம் அவரது பேச்சையாவது இவர்கள் கேட்க வேண்டும்” என்றார்.
மேலும் இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார். இந்த சூழலில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, இந்த விவகாரத்தை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி-க்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதோடு, உயிர்காக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு 18% GST வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில், "உயிர் காப்பீட்டு திட்டத்திற்கு விதிக்கப்படுகிற வரியின் வழி, இதுவரை சுமார் ரூ. 24 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. மக்கள் சிறுக சிறுக சேமித்து கட்டிய காப்பீட்டில் வரி பரிப்பு என்பது மிகவும் கொடுமையான ஒன்று. இதனை இந்தியா கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. உயிர் காப்பீட்டில் GST வரி விலக்கை முன்மொழிகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்