Politics

"காப்பீடு திட்டங்கள் மீதான GST வரியையாவது நீக்குங்கள்" - நிர்மலா சீதாராமனுக்கு ஒன்றிய அமைச்சர் கோரிக்கை !

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் அதிகளவில் உயர்ந்துள்ளது.

இதனிடையே கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டினை தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவம் மற்றும் உயிர் காப்பீட்டு திட்டங்கள் மீது 18% GST வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், காப்பீடு திட்டங்கள் மீதான வரியை நீக்கவேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

நாக்பூர் LIC ஊழியர்கள் சங்கம் தனக்கு அனுப்பிய கடிதத்தை சுட்டிக்காட்டி நிதின் கட்கரி நிர்மலா சீதாராமனுக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு பாஜக அரசின் வரிவிதிப்பை பாஜக அமைச்சரே ஏற்றுக்கொள்ளவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: வயநாடு மக்களை செயற்கைப் பேரிடரால் வறுத்தெடுக்கிறது ‘ஒன்றியம்’ - அமித்ஷாவின் செயலை விமர்சித்த முரசொலி !